
சமந்தாவின் சாகுந்தலம் - வசூலித்தது இவ்வளவுதானா ?
சுமார் 70 கோடி ரூபாய் செலவில் தயாரானதாக சொல்லப்பட்ட இப்படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மொத்தமாக 10 கோடியை மட்டுமே இப்படம் வசூலித்ததாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டும் 5 கோடி வரை வசூலித்துள்ளதாம். கடந்த வாரம் ஓடிடியில் இப்படம் வெளியாகி உள்ளது. ஓடிடி உரிமை ஓரளவுக்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதன் மூலம் கொஞ்சம் நஷ்டம் குறைந்துள்ளது.
தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா நடித்த இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்காதது தெலுங்குத் திரையுலகினரிடம் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமந்தா தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக தெலுங்கில் "குஷி" படத்தில் நடித்து வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!