
ஜெய் பீம் படத்திற்குப் பிறகு குட் சொல்ல வைக்கும் மணிகண்டன்
அப்படத்திற்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த "குட் நைட்" படத்தில் நம்மை மீண்டும் ஒரு முறை காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நெகிழ வைத்திருக்கிறார். "மோகன்" என்ற கதாபாத்திரம், அலுவலக நண்பர்களுக்கு "மோட்டார் மோகன்", காரணம் தூக்கத்தில் அவர் விடும் குறட்டை சத்தத்திற்காக அந்த பட்டப் பெயர். மோகன் கதாபாத்திரத்திலும் அவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்து அவரைப் பாராட்டி வருகிறார்கள். படத்திற்கான விமர்சனங்களும் பாசிட்டிவ்வாக இருப்பதால் படத்திற்கான தியேட்டர்களும், காட்சிகளும் அதிகரித்திருக்கிறது.
15 வருடங்களுக்கு முன்பு "கலக்கப் போவது யாரு" டிவி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டவர். அடுத்து "பீட்சா 2" படத்தின் மூலம் வசனகர்த்தாவாக சினிமாவில் நுழைந்து நடிகராகவும் மாறி, கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார். "விக்ரம் வேதா" படத்திற்கும் வசனம் எழுதியவர் மணிகண்டன். "விஸ்வாசம்" படத்திற்கு வசனம் எழுதியவர்களில் ஒருவர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!