
திருவாரூரில் பர்ஹானா பட காட்சிகள் ரத்து
நேற்று திருவாரூரில் உள்ள தைலம்மை திரையரங்கில் இந்த படத்தை மாலை 6 மணி காட்சி திரையிடப்பட இருந்த நிலையில் இந்த படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக திருவாரூரில் இந்த திரைப்படத்தை திரையிடப்படும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தெரிவித்திருந்தனர். அதனால் போலீஸார் திரையரங்க வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் "பர்ஹானா" படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால், திருவாரூர் தைலம்மை திரையரங்கில் இந்த படத்திற்கான காட்சிகள் ரத்து என்று தியேட்டர் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!