
விஜய்யை தொடர்ந்து காஷ்மீர் செல்லும் சிவகார்த்திகேயன்
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பல்வேறு கலாச்சாரங்களுக்கு மத்தியில் நம் தேசத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றைப் பேசும் படமாக இது இருக்கும். அதிரடி ஆக்ஷன்களுடன் புதுமையான கதைக் களத்தில் பயணிக்கும். ரசிகர்களுக்கு ஒரு நிறைவான அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்க விழாவில் தயாரிப்பாளர்கள் கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன், இணை தயாரிப்பாளர் வக்கீல் கான், பொது மேலாளர் மற்றும் தலைவர் லாடா குருதேன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்புகள் காஷ்மீரில் 60 நாட்கள் நடக்கிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!