
தி கேரளா ஸ்டோரி இன்று ரிலீஸ்: தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் போதியளவில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இந்த படத்தை பார்க்க வருவோர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பதற்றமான பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வன்முறை ஏற்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த படத்துக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பரவுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த படம் சென்னையில் 17 தியேட்டர்களில் ஒன்று மற்றும் இரண்டு காட்சிகளாக வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!