
பொன்னியின் செல்வன் 2 : குடும்பத்தினர் உடன் சென்னையில் படம் பார்த்த ஐஸ்வர்யா ராய்
இந்த படத்திற்காக கடந்த 20 நாட்களாக படத்தில் நடித்த கலைஞர்கள் சோழர்கள் பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தை புரொமோஷன் செய்தனர். சென்னையில் துவங்கிய இந்த பயணம் ஐதராபாத், கொச்சி, பெங்களூரு, மும்பை, டில்லி உள்ளிட்ட பல ஊர்களை சென்றடைந்து இறுதியாக சென்னையில் நிறைவடைந்தது. விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா, ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேற்று படம் வெளியான போதும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், சோபிதா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர். தொடர்ந்து இன்று(ஏப்., 29) சென்னையில் உள்ள தியேட்டரில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோருடன் படம் பார்த்தார். இவர்களுடன் விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ஆகியோரும் படம் பார்த்தனர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகின.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!