
பாகுபலி கொடுத்த தைரியத்தால் பொன்னியின் செல்வன் உருவானது: மணிரத்னம்
மேலும் அவர் கூறியதாவது: பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் ஆர்வம் பல ஆண்டுகளாக எனக்குள் இருந்தது. ஆனால் அதற்கான முயற்சியும், திட்டமிடலும் என்னிடம் இல்லை. காரணம் படத்திற்கு ஆகும் பட்ஜெட். அதனால் இந்த படத்தை நான் உருவாக்குவேன் என்பது கூட எனக்குத் தெரியாது.
இந்த நிலையில் சரித்திர பின்னணியில் "பாகுபலி" படத்தை ராஜமவுலி எடுத்தார். அந்தபடம் ஏற்படுத்திய தாக்கம் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. பொன்னியின் செல்வனை உருவாக்கும் உந்து சக்தியை கொடுத்தது. நான் ராஜமவுலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பாகுபலியை இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன். இது எனக்கு புது பாதையை உருவாக்கி தந்தது. நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத் துறையில் பலருக்கும் கொடுத்தது. இதை அவரை சந்தித்தும் நான் சொல்லி இருக்கிறேன். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!