
ஓவியரான நடிகை ஷாம்லி
பிரபல ஓவியர் ஏ.வி.இளங்கோவனிடம் முறைப்படி ஓவியம் கற்ற ஷாமிலி தற்போது ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார். ஏற்கெனவே பல இடங்களில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ள ஷாமிலி, சமீபத்தில் துபாயில் உள்ள "வேர்ல்ட் ஆர்ட் துபாய்" எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் கண்காட்சியாக பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார். இந்த கலைக்கூடத்தில் உலகம் முழுவதும் 60 நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். சர்வதேச அளவில் ஓவியராக வலம் வர வேண்டும் என்பதே ஷாமிலியின் லட்சியம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!