
அயோத்தி படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
இந்த படத்தின் கதை என்னுடையது என்று சங்கர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு "யாதும் ஊரே" என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதி பதிவு செய்துள்ளேன். அந்த கதையை எனது அனுமதி இல்லாமல் "அயோத்தி" என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். படத்தின் திரைக்கதை மீதான உரிமம் எனக்கு சொந்தமானது. அதனால், இந்த படத்தை ஒ.டி.டி. தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும்"" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அயோத்தி படத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் குற்றசாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியதுடன் படம் வெளியாகி அனைத்து உரிமங்களும் விற்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார். இதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!