
ருத்ரமாதேவி ஏமாற்றியதை சாகுந்தலை சரி செய்வாரா ?
2015ல் "பாகுபலி" படம் வெளிவந்த பிறகு குணசேகர் இயக்கிய "ருத்ரமாதேவி" என்ற சரித்திரப் படம் வெளிவந்தது. அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். "பாகுபலி" அளவுக்கு "ருத்ரமாதேவி" படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் தன்னுடைய அடுத்த படமாக எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு "சாகுந்தலம்" படத்தை இயக்கியுள்ளார்.
சமந்தா இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது. இப்படத்திற்காக சமந்தா தன் உடல்நலத்தையும் மீறி நிறையவே புரமோஷன் செய்து வருகிறார். "பாகுபலி" படத்தில் நடித்த அனுஷ்கா, "ருத்ரமாதேவி" படத்தில் நடித்திருந்தும் ஏமாற்றத்தைத்தான் தந்தார். ஆனால், அந்த ஏமாற்றத்தை இந்த "சாகுந்தலம்" படம் மூலம் சமந்தா சரி செய்வாரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!