
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புஷ்பா 2
இந்த நிலையில் அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று "புஷ்பா 2 : தி ரூல்" என்ற தலைப்புடன் முன்னோட்டம் வெளியிட்டுள்ளது. அதில் புஷ்பா கொல்லப்பட்டதாக பரபரப்பாக ஊடகங்களில் பேசப்படுகிறது. புஷ்பா தங்களுக்கு செய்த உதவிகளை மக்கள் பெருமையாக மீடியாக்களிடம் பேசுகிறார்கள். புஷ்பா இறந்து விட்டதாகவும், வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாகவும் மீடியாக்கள் ஆய்வு செய்கிறது.
இதன் காரணமாக புஷ்பா ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர், அரசியல்வாதிகள் தரப்பில் புஷ்பா கொல்லப்பட வேண்டியவர் என கருத்து கூறப்படுகிறது, மக்கள் தரப்பில் வழக்கமான நல்லவர் பிம்பம் புஷ்பா மீது கட்டமைக்கப்படுகிறது.
இறுதியாக புஷ்பா காட்டு விலங்குகளை கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள வீடியோவில் சிக்குகிறார். “காட்டு விலங்கு எல்லாம் ரெண்டு அடி பின்னால வச்சா, புலி வந்துருச்சுனு அர்த்தம், ஆனா அந்தப் புலியே ரெண்டு அடி பின்னால வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்” என்ற வசனத்துடன் "கெத்தாகக் அல்லு அர்ஜூனின் இன்ட்ரோ வருகிறது. புஷ்பா போலீஸ் ஸ்டேஷனில் கெத்தாக உட்கார்ந்து கொண்டு “புஷ்பாவோட ரூல்” என்கிறார்.
முதல் பாகத்தில் செம்மரக் கடத்தல்காரராக சித்தரிக்கப்பட்ட புஷ்பா இரண்டாம் பாகத்தில் மக்கள் போராளியாக சித்தரிக்கப்படுவதை இந்த டீசர் காட்டுகிறது. படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!