
விதி மீறல் கட்டிடங்கள் : எழுத்தாளர் ராஜேஷ் குமார் வருத்தம்
சமீப காலங்களாக கதைத் திருட்டுகள் அதிகம் நடந்து, அவை சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் வெளிவந்த "அயோத்தி, விடுதலை" ஆகிய படங்களும் அந்த சர்ச்சையில் சிக்கியுள்ளன.
"விடுதலை" படத்தின் பல காட்சிகள், கதாபாத்திரங்கள் ச.பாலமுருகன் எழுதிய "சோளகர்தொட்டி" நாவலின் தாக்கத்தில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அது குறித்து அந்நாவலை எழுதிய பாலமுருகன் அவரது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில் கமெண்ட் பகுதியில் எழுத்தாளர் ராஜேஷ்குமாரும், “என்னுடைய பல நாவல்களின் அஸ்திவாரங்களில் இது போன்ற விதி மீறல் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பார்த்துக் கொண்டே நகர்ந்து விடவேண்டியதுதான். சட்டத்தை நாடினால் நட்டம் நமக்குத்தான்,” என்று தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
எத்தனையெத்தனை படங்களில் ராஜேஷ்குமார் எழுதிய நாவல்களின் காட்சிகள் இடம் பெற்றிருந்தால் அவர் இந்த அளவிற்கு வருத்தப்பட்டு பதிவு செய்திருப்பார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!