
கதையின் நாயகனாக வரவேற்பைப் பெறுவாரா சூரி?
வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களாக இருந்து கதாநாயகர்களாக மாறியவர்களுக்கு சில படங்கள்தான் தொடர்ந்து கை கொடுத்துள்ளன. அதன்பின் அவர்கள் சந்தித்த ஏமாற்றங்கள்தான் அதிகமாக உள்ளன.
ஒரு சில காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோம் என இருப்பதையும் விட்டுவிட்டு தவித்துள்ளார்கள். ஆனால், சூரி தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்திலும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். "விடுதலை" படத்தின் டிரைலர்கள், பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பின் மூலம் படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!