
32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா
இந்த நிலையில் தற்போது இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ள ரசூல் பூக்குட்டி மலையாளத்தில் "ஒட்ட" என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் மம்தா மோகன்தாஸ், ஆசிப் அலி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அதைவிட முக்கியமாக நடிகை ஷோபனா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த எண்பதுகளின் இறுதியில் வெளியான வாத்தியார் வீட்டு பிள்ளை மற்றும் மல்லுவேட்டி மைனர் என இரண்டு படங்களில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷோபனா. இந்த நிலையில் 32 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் தற்போது மலையாள படத்திற்காக இணைந்துள்ளது உண்மையிலேயே ஆச்சரியமான நிகழ்வுதான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!