
ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தை தொடங்கி வைத்தார் ராஜமவுலி
படத்தின் பணிகளை இயக்குனர் எஸ்.எஸ்.ரஜமவுலி கிளாப் அடித்து துவக்கி வைத்தார், கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் கேமராவை இயக்கினார். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பாளர் தில் ராஜு, என்டிஆரின் சகோதரர் கல்யாண் ராம், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுள்ளது. இது பக்கா ஆக்ஷன் படமாக உருவாகிறது. ஐதராபாத்தைத் தவிர, விசாகப்பட்டினம் மற்றும் கோவாவில் அமைக்கப்பட்டுள்ள செட்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. நந்தமுரி தாரக ராமராவ் ஆர்ட்ஸ் மற்றும் யுவ சுதா ஆர்ட்ஸ் பேனரில் மிக்கிலேனேனி சுதாகர் தயாரிப்பாளராக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!