
‛பொன்னியின் செல்வன் 2 : ‛அக நக முதல்பாடல் வெளியானது
முதற்கட்டமாக ‛அக நக" என்ற முதல் பாடலை இன்று மார்ச் 20ல், மாலை வெளியிட்டனர். இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுத, சக்திஸ்ரீ கோபாலன் பாடி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் முதல்பாகத்தில் இந்த பாடலின் தொகுப்பு வெளியானது. தற்போதை அதையே முழுநீள பாடலாக வெளியிட்டுள்ளனர். அழகிய தமிழ் சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த பாடல் வந்தியவன் கார்த்தி - குந்தவை திரிஷா இடையேயான காதலை வெளிப்படுத்தும் பாடலாக வெளியாகி உள்ளது. பாடல் வெளியான 45 நிமிடங்களில் 3.15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன. தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!