
சென்னையில் மூன்று நாட்கள் இஸ்ரேலிய திரைப்பட விழா
மார்ச் 23ம் தேதி மாலை 7:00 மணிக்கு துவக்க விழா நடக்கிறது. இதில் தென்னிந்தியாவுக்கான இஸ்ரேலிய துாதர் டாமி பென் - ஹெய்ம், துணை துாதர், இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் தலைவர் சிவன் கண்ணன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ரவி கொட்டரக்கரா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
இதில் ஒன் வீக் அன்ட் எ டே, தி டெஸ்டமென்ட், பர்கிவ்னஸ், அபுலேலே உள்ளிட்ட பாராட்டு பெற்ற படங்கள் திரையிடப்பட உள்ளன. படங்கள் தினமும் மாலை, 6:00, 7:30 மணியளவில் திரையிடப்பட உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!