
ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா
தற்போது சாயிஷா ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார். "பத்து தல" படத்தில் "ராவடி" பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். ஒபெலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்து தல. பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த பாடலில் சாயிஷாவுடன் இணைந்து கவுதம் கார்த்திக் ஆடியுள்ளார்.
நட்புக்காகவே இந்த படத்தில் சாயிஷா ஆடியுள்ளார். தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆட மாட்டார். ஆனால் மீண்டும் நடிக்க வருகிறார். இதற்கான கதை தேர்வு நடந்து வருகிறது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!