
நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது
தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து "இறைவன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். "தனிஒருவன்" இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நயன்தாராவின் 75வது படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தை நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில், ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தை குறுகிய காலத்தில் தயாரித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஜெய் மற்றும் சத்யராஜுடன் ஏற்கனவே நயன்தாரா "ராஜா ராணி" படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!