
ரூ.10 கோடி பட்ஜெட்டில் ராம்சரண் பட பாடல்
தெலுங்கு சினிமா முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 20ம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் ராம்சரண், கியாரா அத்வானி வைத்து ஒரு பாடலை பிரமாண்டமாக படமாக்க ஷங்கர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்காக கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா இயக்கத்தில் ஐதராபாத்தில் பிரமாண்ட செட் தயாராகி வருகிறது. இப்பாடல் சுமார் பத்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் பட பாணியில் இந்த பாடல் கலக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் பாடலின் படப்பிடிப்பு சுமார் பத்து நாட்கள் நடைபெற உள்ளதாம்.
படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை வரும் மார்ச் 27ம் தேதி ராம்சரண் பிறந்தநாளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!