
பத்துதல ரீமேக் படம் இல்லை: இயக்குனர் விளக்கம்
இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் கிருஷ்ணா பேசியதாவது : இந்தப் படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் மேல் தயாரிப்பில் இருந்தது. அத்தனை காலங்களிலும் அது குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்திருக்கிறது. படம் வெளியானாலும் அது எப்படியான வெற்றியாக அமையும் என்ற கம்பேரிசன் பயமாக உள்ளது.
இது ரீமேக் கிடையாது. தழுவல்தான். 90 சதவிகிதம் வேறாக கொடுத்திருக்கிறேன். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் எலிமெண்ட்ஸ் இருக்கும். ஏ.ஆர். ரஹ்மான் சார் சிறந்த இசையை கொடுத்துள்ளார். படம் என்றாலே வசனம் தான் முக்கியாமனது. அது சிறப்பாக வந்துள்ளது.
நான் எது கேட்டும் ரஹ்மான் நோ சொன்னதே கிடையாது. கடைசி நேரத்தில் அவர் "நம்ம சத்தம்" லிரிக்கல் வீடியோவில் சிறப்புத் தோற்றத்தில் ஷூட் செய்து அனுப்பினார். அவரது அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். படத்தின் மிகப்பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று நேரு விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை மேடையில் பாட உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!