
அஜித்தின் உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு என்ன பெயர் தெரியுமா...?
இதனிடையே கடந்தாண்டு ‛துணிவு" படத்தில் நடித்து வந்தபோது பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் அஜித். அதன் ஒரு பகுதியாக இந்திய பயணத்தை முடித்துவிட்டார். அஜித் 62 படத்தை முடித்ததும் மீண்டும் தனது பைக் சுற்றுபயணத்தை துவங்க உள்ளார். இந்நிலையில் இந்த பயணத்திற்கு ஒரு பெயர் வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அஜித்தின் மேலாளர் வெளியிட்ட பதிவு : ‛‛லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு அஜித் குமார் துவங்க இருக்கும் 2வது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது"" என்று தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!