
மித்ரன் ஜவஹர் - மாதவன் படத்திற்கு திரைக்கதை எழுதும் ஜெயமோகன்
திருச்சிற்றம்பலம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதில், நடிகர் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது . வழக்கமாக மித்ரன் ஜவஹர் படங்கள் என்றாலே கதையோ, திரைக்கதையோ வேறு ஒருவர் எழுதுவார்கள் . அதேபோல் இந்த படத்திலும் திரைக்கதை பணிகளை ஜெயமோகன் மேற்கொள்கிறார் .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!