
தனுஷின் அடுத்த தெலுங்கு பட அப்டேட்
பிப் 24, 2023
Advertisement
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது. தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட இப்படம் ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போதே தனுஷ் இயக்கும் ராயன் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது .
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!