
ஒரு இரவு கதையில் உதயநிதி
படம் பற்றி இயக்குனர் மாறன் கூறியதாவது: ஒரு பிரச்னையில் சிக்கும் உதயநிதி அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரு இரவில் நடக்கும் கதை. அந்த ஒரு இரவுக்கு முன்னும், பின்னுமான சம்பவங்கள் திரைக்கதையில் சொல்லப்படுகிறது. இதில் உதயநிதி கிராபிக்ஸ் டிசைனராக நடித்திருக்கிறார். அவரது காதலியாக ஆத்மிகா நடித்துள்ளார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் போன்றே இதுவும் கிரைம் த்ரில்லர் படம். 80 சதவீத காட்சிகள் இரவில்தான் நடக்கும். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!