
ஷோ பிரேக்ல் இருந்து தப்பிக்குமா தியேட்டர்கள்?
அதில் சில படங்களுக்கு படம் வெளியான முதல் நாளே தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வராமல் "ஷோ பிரேக்" ஏற்பட்டுள்ளது. "ரன் பேபி ரன்" மட்டும் சில நாட்களுக்கு கொஞ்சம் ரசிகர்களை வரழைத்துள்ளது. மற்ற படங்கள் நிலை நிறையவே மோசம் என்கிறார்கள். தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்க எந்த ஒரு திட்டமும் அந்தப் படங்களைத் தயாரித்த நிறுவனங்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம் என தியேட்டர் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
சென்னை போன்ற பெரு மாநகரங்களிலேயே பல தியேட்டர்களில் அந்தப் படங்களுக்கு ஷோ பிரேக் நடந்துள்ளது என அதிர்ச்சித் தகவலையும் தருகிறார்கள். இன்று பிப்ரவரி 10ம் தேதி “டாடா, கொடை, கூட்டம், நினைவே நீ, வர்ணாஸ்ரமம், வசந்த முல்லை” ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களில் எதற்குக் கொஞ்சமாவது கூட்டம் வரும் எதற்கு ஷோ பிரேக் வரும் என்ற ஒரு அதிர்ச்சியிலேயே தியேட்டர்காரர்கள் இருக்கிறார்களாம்.
சிறிய பட்ஜெட் படங்களை ஓட்ட சிறு பிளான் எதையாவது செய்வார்களா என பல வருடங்களாகத் தியேட்டர்காரர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால், அது யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!