
கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன்
கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில், ஜெயப்பிரகாஷ், "ஆடுகளம்" நரேன், போஸ்வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சுவாதிஸ், பிரபா, மெர்லின், நிதிஷா என்ற நான்கு புதுமுகங்களையும் அறிமுகம் செய்கிறார். எஸ்ஆர் பிரபாகரன் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு எழுத்தாளராக நல்ல கருத்துள்ள கதைகளை கதாநாயகர்களை மையப்படுத்திய படங்களில் சொல்ல முடியவில்லை. நல்ல கதைகளை தொடர்ந்து கமர்ஷியலாக பதிவுசெய்ய விரும்புகிறேன் அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நல்ல கதைகளையும் நிறைய புதுமுக இயக்குனர்களையும் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!