
தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் வாரிசு
நேரடி தெலுங்குப் படங்களான "வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி" படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் தெலுங்கு வெளியீட்டைத் தள்ளி வைத்தார் தயாரிப்பாளர் தில் ராஜு. முன்னதாக தமிழில் வெளியாகும் போதுதான் தெலுங்கிலும் படத்தை வெளியிடுவேன் என சொல்லி வந்தார். ஆனால், கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டார். அதற்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம்தான் காரணம் என்கிறார்கள்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு தட்டுத் தடுமாறி இப்போதுதான் 15 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட தெலுங்கு உரிமைக்கான "ஷேர்" தொகையை வசூலித்துள்ளதாம். மொத்த வசூல் 27 கோடி என இருந்தாலும் "ஷேர்" தொகைதான் படத்தின் லாபக் கணக்கில் சேரும். அந்த விதத்தில் பெரிய நஷ்டம் வராமல் "வாரசுடு" காப்பாற்றிவிட்டது என கொஞ்சமே கொஞ்சம் மகிழ்கிறார்கள் படத்தை வாங்கியவர்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!