விஜய் 67 காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த்
ஜன 31, 2023
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள "விஜய் 67" படத்தின் படக்குழுவினர் இன்று(ஜன., 31) காலை சென்னையிலிருந்து காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகருக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
அந்த விமானத்தில் யார் யார் பயணித்துள்ளார்கள் என்பது குறித்து பயணிகள் விவரத்தை தேடி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளார்கள். அந்தப் பட்டியலில் த்ரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த் நடிப்பது உறுதியாகி உள்ளது. காஷ்மீரில் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கும் எனத் தெரிகிறது.
இன்று படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் விவரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளது. முதலில் சஞ்சய் தத் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அடுத்து ஒவ்வொரு அறிவிப்பாக வர உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!