
கிரிமினல் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது
இதன் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. இதுகுறித்து தயாரிப்பாளர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: எங்களுடைய புதிய புராஜெக்ட்டான "கிரிமினல்" வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள். கவுதம் கார்த்திக் கிரிமினலாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார். பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும், புதிதாகவும் பார்வையாளர்களுக்கு தெரிவார் என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!