
கூலிப்படை தலைவியாக பிரியாமணி
இதில் பிரியாமணி கூலிக்காக கொலை செய்யும் படையின் தலைவியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படம் பற்றி இயக்குனர் விவேக் கண்ணன் கூறியதாவது: இந்தக் கதையை நாங்கள் ஓடிடிக்கான படமாகதான் ஆரம்பித்தோம். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதை பின்பு உணர்ந்தோம். இந்தப் படம் கேங் வார் குறித்தானது கிடையாது. ஆனால் உணர்ச்சி மிகுந்த பணத்துக்காக கொலை செய்யக்கூடிய கொலைகாரர்கள் பற்றிய கதையாக இது இருக்கும்.
சென்னை, மும்பை மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் படமாக்கி உள்ளோம். பிரியாமணியிடம் இந்த கதையை சொன்னதும் கதை பிடித்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டார்.அதேபோல, ஜாக்கி ஷெராப் கதைக்கு உள்ளே வந்ததும் இது பான் இந்தியா படமாக மாறியது. படத்தில் சன்னி லியோன் தீவிரமான நடிப்பைக் கொடுத்துள்ளார். சாரா அர்ஜூன் இதுவரை கண்டிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!