
ஜோவுக்காக 2 வருடம் காத்திருக்கும் ரியோ ராஜ்
படம் குறித்து ரியோ ராஜ் கூறும்போது "கதையின் நாயகன் "ஜோ"வின் பள்ளிக் காலத்தில் இருந்து அவனது திருமணத்திற்குப் பிந்தைய நாட்கள் வரையிலான காதல் பயணத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகிறது. படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்காக நான் நீண்ட முடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பேன். இதன் காரணமாகவே, வேறு எந்த புராஜெக்ட்டிலும் கடந்த இரண்டு வருடங்களாக நான் ஈடுபட முடியாமல் இருக்கிறேன்.
மொத்த படப்பிடிப்பும் வெறும் 37 நாட்களில் முடிவடைந்துள்ளது. சென்னை, ராமேஸ்வரம், ராம்நாடு, பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பார்வையாளகளுக்கு ஒரு பீல் குட் லவ் ஸ்டோரியாக இந்த படம் இருக்கும்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!