
தாத்தா, பேரனாக நடிக்கும் மிர்ச்சி சிவா
படம் குறித்து இயக்குனர் முத்துக்குமரன் கூறியதாவது: வெள்ளைக்காரன் காலத்தில் பார்பராக இருந்த அய்யன்காளிக்கு அந்தக் காலத்தில் அவர் நினைத்த காரியங்களை செய்ய முடியவில்லை. அதனை பல வருடஙக்ளுக்கு பிறகு அவரது பேரன் காளி எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் கதை. இதில் தாத்தா பேரன் என்ற இரு கேரக்டரிலும் சிவா நடித்துள்ளார். தாத்தா கேரக்டரில் சீரியசாகவும், பேரன் கேரக்டரில் காமெடியாகவும் நடித்திருக்கிறார்.
அவரது நண்பராக சுருளி என்ற கேரக்டரில் யோகி பாபு நடித்துள்ளார். நாயகி நயன் கரிஷ்மா அரசியல் கட்சி தலைவரின் மகளாக நடித்திருக்கிறார். இது அரசியலை கிண்டல் செய்யும் படம். அதனால் பின்னாளில் வம்பு எதுவும் வரக்கூடாது என்பதற்காக பொதிகைமலைநாடு என்ற கற்பனை நாட்டை உருவாக்கி அங்கு கதை நடப்பதாக காட்டுகிறோம். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!