
ஹிமாலயாவில் புத்தாண்டு கொண்டாடிய மாளவிகா மோகனன்
இந்த நிலையில் பிரபலங்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டல்கள், கடற்கரை என புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாட மாளவிகா மோகனன் ஹிமாலயா பக்கம் சென்று அமைதியாக தனது புத்தாண்டு தினத்தின் முதல் நாளை கழித்திருக்கிறார்.
மலைப்பகுதியில் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தன்னுடைய சில போட்டோக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். மேலும் புத்தாண்டு பற்றி அவர் கூறும்போது, “இந்த வருடத்தின் முதல் நாள் அவ்வளவு அழகானதாக இருந்தது. இங்கு என்னைச் சுற்றிலும் மலைகளும் இளஞ்சிவப்பு நிற பூக்களுமாக இந்த நாளை ரொம்பவே இனிமையாக்கி விட்டன. கடந்தாண்டு எனக்கு மிகவும் நல்லபடியாகவே கடந்து சென்றதாக நான் உணர்கிறேன். இந்தாண்டும் அதே போல நிறைய மகிழ்ச்சி, அன்பு, முத்தங்கள் நிறைந்ததாக உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!