
இயக்குனரான கதாசிரியர்
இந்த படத்தில் கிஷோர், லிஜோமோல் ஜோஸ், விதார்த், குரு சோமசுந்தரம், யோகி பாபு, இளவரசு, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில், எம்.எஸ்.கிருஷ்ணாவின் இசையில், படம் உருவாகிறது.
படம் பற்றி ஆனந்த் அண்ணாமலை கூறியதாவது: நான் எனது நண்பர்களுடன் இணைந்து மாயவரம் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறோம். வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர். ஒரு வாழ்வு எப்படி இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் மர்மமான முறையில் எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது, போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் ஒளி, ஒலி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!