
மனைவியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்
அந்த பதிவில், ‛‛தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம், நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் ஓடும்"" என்று பதிவிட்டிருந்தார்.
செல்வராகவனின் இந்த பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பின. தனது தம்பியான நடிகர் தனுஷ் மனைவியை விவாகரத்து செய்ததை போல, இவரும் தனது மனைவி கீதாஞ்சலியை பிரிகிறாரா என பல்வேறு யூகங்கை கிளப்பியது. இந்த நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனைவி கீதாஞ்சலியுடன் இருக்கும் புகைப்படத்தினைப் பதிவிட்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவன் தனது முதல் மனைவியான நடிகை சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!