
பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்த ஜெனிலியாவின் கணவர்
இதை தொடர்ந்து ரித்தேஷ் தேஷ்முக் முதன்முதலாக டைரக்ஷனில் இறங்கி இயக்கியுள்ள படம் "வேத்". இந்தபடத்திலும் ஜெனிலியாவே கதாநாயகியாக நடிக்க, ரித்தேஷே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் கோலாப்பூர் பஞ்சகங்கா நதிக்கரையில் அமைந்துள்ள மகாலட்சுமி கோவிலுக்கு கணவன் மனைவி இருவரும் தரிசனம் செய்ய வந்தனர்.
அவர்கள் கோவிலுக்குள் சென்றிருந்த சமயத்தில் அந்த விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த செய்தியாளர்களை, பாதுகாப்பிற்காக வந்த பவுன்சர்கள் அவமரியாதையாக நடத்தியதுடன் அவர்களை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.. இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ரித்தேஷ் தேஷ்முக் நானும் ஜெனிலியாவும் இணைந்து கோயிலுக்குச் சென்று பத்து வருடங்கள் ஆகிவிட்டது.. அதற்காகத்தான் இப்பொழுது தரிசனம் செய்ய வந்தோம்.. அதுமட்டுமல்ல.. அது சினிமாவைப் பற்றி பேசுவதற்கான இடமும் அல்ல.. நானும் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு யாருக்கும் அழைப்பும் விடுக்கவில்லை. அதேசமயம் எனது குழுவினர் செய்தியாளர்களை தாக்கி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!