
எம்.ஜி.ஆர் திரைப்பட நகரை புதுப்பிக்க தமிழக அரசு முடிவு: முதல்கட்டமாக 5 கோடி ஒதுக்கீடு
நகருக்குள் இருக்கும் ஒரே பிலிம் சிட்டி இதுதான் இதை சீரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாக திரைத்துறையினரால் வைக்கப்பட்டது. தற்போது தமிழக அரச இதனை சீரமைக்க முன்வந்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக அடிப்படை வசதிகளை சீரமைக்க 5 கோடி ஒதுக்கி உள்ளது.
இதுகுறித்து செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகரப் பகுதி, தரமணியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலமாக பராமரிக்கப்படாமல் இருந்தது. அங்கே சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடிய வகையில், அதற்குரிய புனரமைப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது.
5 கோடி ரூபாய் முதல் கட்டமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது. திட்ட அறிக்கை வந்த பிறகு திரைப்படத் துறையினர் எதிர்பார்க்கக் கூடிய வகையில் முடிந்த அளவு அதில் அடிப்படை வசதிகளை செய்து தருவது தான் அரசினுடைய நோக்கம். இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!