
காதல் கதையில் ‛1982 அன்பரசின் காதல்
இயக்குனர் உல்லாஷ் சங்கர் படத்தைப் பற்றி கூறியதாவது : கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான். அந்த பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயலுகிறான். அவனால் வெளிப்படுத்த இயலவில்லை. இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்றனர்.
மனம் தளராத அன்பரசு காதலி இருக்கும் கேரளாவிற்கு சென்று அவளிடம் காதலை கூற முற்படுதையில் அந்த திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது. அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் அன்பரசு அவளிடம் தன் காதலை சொன்னானா ? என்பதை கதைக்களமாக்கி இந்த படம் உருவாகி உள்ளது. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!