
டிசம்பர் 30 - ஒரே நாளில் 4 கதாநாயகிகளின் படங்கள் ரிலீஸ்
அந்தப் படங்களில் நான்கு படங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள். த்ரிஷா நடித்துள்ள "ராங்கி", ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள "டிரைவர் ஜமுனா", கோவை சரளா நடித்துள்ள "செம்பி", சன்னி லியோன் நடித்துள்ள "ஓ மை கோஸ்ட்" ஆகிய படங்களில் கதாநாயகிகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அந்தப் படங்கள் அனைத்துமே பழி வாங்கும் கதைகள் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
"பொன்னியின் செல்வன்" படத்திற்குப் பிறகு த்ரிஷா நடித்து வர உள்ள படம் "ராங்கி". ஐஸ்வர்யா ராஜேஷ் தனி கதாநாயகியாக நடித்துள்ள "டிரைலவர் ஜமுனா" படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடித்துள்ள "செம்பி" படமும் மாறுபட்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்னி லியோன் நடிக்கும் படம் என்பதே "ஓ மை கோஸ்ட்" படத்திற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்கு முன்பு கதாநாயகிகளுக்கு இடையில் இப்படி ஒரு போட்டி வெளியீடு வந்ததே கிடையாது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!