
9 நாட்களில் 200 கோடி வசூலைக் கடந்த அவதார் 2
முதல் வார இறுதியில் சுமார் 40 கோடி வசூலைக் கடந்த இந்தப் படம் கடந்த வார நாட்களில் குறைவான வசூலையே பெற்றது. தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பமாகிவிட்டதால் கடந்த இரண்டு நாட்களாக படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகிவிட்டதாம். இந்த இரண்டு நாட்களில் மட்டும் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்கிறார்கள். தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ள இந்தப் படம் இந்த விடுமுறை நாட்களில் இன்னும் வசூலித்து 250 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் 650 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை "அவதார் 2 இதுவரையில் பெற்றுள்ளது. அதில் அமெரிக்க வசூல் 200 மில்லியன், மற்ற நாடுகளில் 400 கோடி வசூல் என்கிறார்கள். 650 மில்லியன் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 5369 கோடி ரூபாய் ஆகும். சுமார் 400 கோடி யுஎஸ் டாலர் மதிப்பில், அதாவது 3300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் "அவதார் 2" தயாரிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!