
இந்தியாவில் 3 நாளில் 160 கோடி வசூலித்த அவதார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுகுறித்து படத்தின் இந்திய விநியோக நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அவதார் வெளியீட்டுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் தீபாவளி கொண்டாட்டம் போல் உள்ளது. அவதாரின் 2ம் பாகம் உலகளாவிய மற்றும் இந்திய பாக்ஸ் ஆபிஸை புயல் போன்று கைப்பற்றியுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி பாக்ஸ் ஆபிஸில் "அனைத்து படங்களின் ராஜா"வாக அவதார் மாறி உள்ளது. கிறிஸ்துமஸ் வார முன்பதிவு முழு வீச்சில் நடந்து வருகிறது.
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியிடப்பட்ட 3 நாட்களில் உலகம் முழுக்க 3500 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 160 கோடி வசூலித்துள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!