
தடுக்கி விழுந்தால்….. செல்வராகவனின் அட்வைஸ் பதிவு
இயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த ஆண்டில் "பீஸ்ட்" படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அடுத்து "சாணி காயிதம்" படத்திலும், "நானே வருவேன்" படத்திலும் நடித்தார். தற்போது "பகாசுரன்" படத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் "கருத்தான" பதிவுகளைப் போடுபவர் செல்வராகவன். அந்த விதத்தில் நேற்று "தடுக்கி விழுவது" பற்றிய ஒரு அட்வைஸ் பதிவு போட்டுள்ளார். அதில், “இங்கு தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு, நமக்கு நாமே ஆறுதல் அடைந்து, எதையாவது பிடித்து கொண்டு, நொண்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுக்க விழுந்து கிடக்க வேண்டியதுதான்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த அட்வைஸை அவர் இயக்குனர் செல்வராகவனுக்காக சொல்லிக் கொண்டாரா அல்லது பொதுவாக சொல்லிக் கொண்டாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!