
ஆர்யாவின் பிறந்த நாளில் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா!
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனபோதும் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை. இந்நிலையில், இன்று ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார் சாயிஷா. புகைப்படத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே. நீங்கள் எப்போதுமே சிறந்த கணவர், சிறந்த தந்தை, சிறந்த மனிதர். நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இருப்பதால் நாங்கள் பாக்கியசாலிகள். நான் என்றென்றும் உங்களை நேசிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!