
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான படம்
தமிழ்செல்வன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: தொழில்நுட்ப புரட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு சவுகரியத்தையும், வசதியையும், நேர சேமிப்பையும் அளிக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட. நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனைகள் ஆன்லைனில் நடக்கின்றன. அதேபோல் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் நொடிப் பொழுதில் தங்கள் பணத்தை இழந்தவர்களும் ஏராளம்.
இப்படி ஆன்லைன் மூலம் பண இழப்பைச் சந்தித்தவர்கள் நம் அருகிலேயே இருப்பார்கள். அதனால்தான் அப்படிப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கத் தமிழக அரசு முன்வந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக்கி அதன் தீமைகளை விவரித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் தான் "விழித்தெழு". இன்றைய சூழலில் அனைவரது வாழ்க்கையிலும் இணையதள மோசடியை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதைத் தட்டிக் கேட்கும் விதமாக விழித்தெழு படம் உருவாகியுள்ளது. என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!