
பாபா - 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் படத்தின் அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல்
அதற்காக தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடைபெறுகிறது. சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. "பாபா" வெளிவந்த 2002ம் ஆண்டில் அதிகாலை காட்சிகள் என்பது நடைமுறையில் இல்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ஒரு படத்திற்கு அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல் என்பது வியப்பான ஒன்றுதான்.
இந்த வாரம் பல புதிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் அவற்றிற்குக் கூட அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடைபெறவில்லை. ஆனால், "பாபா" படத்திற்கு அதிகாலை காட்சி, அதுவும் ஹவுஸ்புல் என்பதை திரையுலகினரும், ரசிகர்களும் அதிசயத்துடன் பார்க்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!