
நான் ஒன்றும் பிரேமம்-2 எடுக்கவில்லையே ; அல்போன்ஸ் புத்ரன் விரக்தி
இந்த நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் கொடுப்பது போன்று விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அல்போன்ஸ் . இதுபற்றி அவர் கூறும்போது நான் பிரேமம் 2 அல்லது நேரம் 2 படங்களை இயக்கி வருகிறேன் என்று உங்களிடம் சொல்லவில்லையே. இந்த படத்தின் பெயர் கோல்டு நானும் எனது படக்குழுவினரும் நிச்சயமாக உங்கள் வெறுப்பை சம்பாதிக்கும்படியான அல்லது உங்களது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்கும் விதமாக படம் கொடுப்பதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை, என்னையும் கோல்டு பட குழுவினரையும் சந்தேகிக்க வேண்டாம்.
தயவுசெய்து கோல்ட் திரைப்படம் இப்படி எடுக்கப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற விமர்சனங்களை மட்டும் தயவுசெய்து பதிவிட வேண்டாம்.. உங்களில் யாருக்காவது கோல்டு படத்தை இயக்கிய அனுபவம் இருந்தால் உங்களது எதிர்மறை விமர்சனங்களை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!