
50வது பிறந்தநாளைக் கொண்டாடிய சுகன்யா
சில வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது "இந்தியன் 2" படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு நவம்பர் 25ம் தேதி தன்னுடைய 50வது பிறந்தநாளை லண்டனில் கேக் வெட்டிக் கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். “எனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் எனது 50வது பிறந்தநாளை லண்டனில் நவம்பர் 25ம் தேதி கொண்டாடியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. எனது நலம்விரும்பிகளின் அன்பிற்கு மிகவும் நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!