
துணிவு படத்திற்காக பாடல் பாடிய மஞ்சு வாரியர்
இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் "சில்லா சில்லா" என தொடங்கும் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது .
இந்நிலையில் துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியரும் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த தகவலை புகைப்படங்களுடன் அவரே பகிர்ந்துள்ளார். அதோடு, ‛‛ஜிப்ரான் இசையில் பாடியது திரில்லானது. துணிவு படத்தில் சுவாரஸ்யமான ஒரு பாடல் பாடியது மகிழ்ச்சி. இந்த பாடலை கேட்க ஆவல்"" என தெரிவித்துள்ளார் மஞ்சு.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!