
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் : வடிவேலு பாடிய இரண்டாவது பாடல் வெளியீடு
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான "அப்பத்தா பாடல்" வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து பணக்காரன் என தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலையும் வடிவேலு தான் பாடி உள்ளார். அவரது நய்யாண்டி பேச்சு ஸ்டைலில் இந்த பாடல் உருவாகி உள்ளது. அவருடன் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடி உள்ளார். விவேக் எழுதி உள்ளார். பாடல் வெளியான 16 மணிநேரத்தில் 21 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக ஒரே படத்தில் வடிவேலு இரண்டு பாடல்களை பாடி உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!